தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்

12th Apr 2022 01:50 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

ADVERTISEMENT

தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

12.04.22:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மற்றும் வடஉள் மாவட்டக்ளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

13.04.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

14.04.22: நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்கங், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.04.22, 16.04.22: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துமன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

கடம்பூர், கூடலூர், கயத்தாறு, பெரிய குளம் தலா 9, கயத்தார், முதுகுளத்தூர் 7, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் தலா 6, எட்டயபுரம், திருச்சுழி, கடலாடி, தேக்கடி தலா 5, அரண்மனைப்புதூர், மதுரை தெற்கு, சூரங்குடி, நாகர்கோவில், சிவகிரி, கோவில்பட்டி தலா 4, பொள்ளாச்சி, மணியாச்சி, மணமேல்குடி, பெரியார், பூதப்பாண்டி, சிவகாசி, பரமக்குடி, மதுரை விமான நிலையம், ஆயுடையார்கோயில், உடுமலைப்பேட்டை, திருப்புவனம், வைப்பார் 3, வேடசந்தூர், தக்கலை, அம்பாசமுத்திரம், அரிமளம், வெம்பக்கோட்டை, சாத்தான்குளம், சித்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், பெருஞ்சாணி அணை தலா 2, உத்தமபாளையம், திருக்காட்டுப்பள்ளி, சூரலக்கோடு, ராமநாதபுரம் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை

12.04.22: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

13.04.22: தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT