தமிழ்நாடு

கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை

12th Apr 2022 10:54 AM

ADVERTISEMENT


சென்னை: கரோனா பேரிடர் தொடங்கியது முதல், ஒவ்வொரு நாளும் போராட்டக்களமாக இருந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, இன்று கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்தியாவுக்குள் கரோனா நுழைந்து விட்டது என்ற செய்தி வெளியானதுமே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரோனா இரண்டு அலைகளின் போதும் ஏராளமான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் இந்த மருத்துவமனை வாயிலில் நீண்ட தூரம் நின்றிருந்த காட்சிகள், கரோனாவின் கோரத்தாண்டவத்தை எடுத்துச் சொல்வதாக இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இன்று முதல் முறையாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் இல்லாத நாள் என்ற சாதனையை மருத்துவமனை படைத்துள்ளது.

கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வளாகம் இன்று நோயாளிகள் இல்லாமல் இருந்ததைப் பார்த்து மருத்துவர்களும், ஊழியர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT