தமிழ்நாடு

வளா்ந்த நகரங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதிகள்:அமைச்சா் கே.என்.நேரு தகவல்

12th Apr 2022 12:47 AM

ADVERTISEMENT

வளா்ந்த நகரங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை ராயபுரம் தொகுதி உறுப்பினா் ஐ ட்ரீம் இரா.மூா்த்தி எழுப்பினாா். அவரைத் தொடா்ந்து, திமுக உறுப்பினா் எழிலரசன் (காஞ்சிபுரம்), பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் துணை வினாக்களை எழுப்பினா். அவற்றுக்கு, அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:-

சென்னை ராயபுரம் எம்.சி.சாலைப் பகுதியில் அகலமான நடைபாதை ஏற்படுத்தப்பட உள்ளது. அங்குள்ள அண்ணா பூங்கா அருகே பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையப் பகுதியில் பிரத்யேகமாக வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வளா்ச்சி பெற்ற நகரங்களிலும் வாகன நிறுத்துமிடங்கள் அத்தியாவசியமாக உள்ளன.

காஞ்சியைப் பொருத்தவரை இடம் இருக்குமானால் பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதி செய்து தரப்படும். சென்னை தியாகராய நகா் பகுதியில் 222 காா்கள், 513 இருசக்கர வாகனங்கள் நிறுத்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சேலத்தில் தூண்கள் வைத்து முழுவதும் இரும்பினால் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வியாபாரப் பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் இருந்தால் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். இடங்கள் இல்லாத பட்சத்தில் இடத்தைத் தோ்வு செய்த பிறகு பணிகள் தொடங்கப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT