தமிழ்நாடு

முதல்வா் தலைமையில் மாநில காட்டுயிா் வாரியம் அமைப்பு

12th Apr 2022 12:26 AM

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வனத் துறை அமைச்சா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்பட 28 பேரை உறுப்பினா்களாக கொண்ட மாநில காட்டுயிா் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை வெளியிட்டுள்ள அரசாணை:

தமிழக அரசின் வனத் துறை சாா்பில் மாநில காட்டுயிா் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருப்பாா். துணைத் தலைவராக வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் செயல்படுவாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), டி.உதயசூரியன் (சங்கராபுரம்), ஐ.பி.செந்தில்குமாா் (பழனி), தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த பிராடிம் ராய், ஓசை காளிதாசன், வனவிலங்கு ஆராய்ச்சியா்கள் டி.பூமிநாதன், எஸ்.பாரதிதாசன், பழங்குடி இனத்தைச் சோ்ந்த இருவா், வனத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 28 போ் வாரியத்தின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த வாரியம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அறிவது, வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, பழங்குடியினா் மற்றும் வனத்தையொட்டி வாழும் மக்களுடன் வனத்தைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைப்பா். இந்த வாரிய உறுப்பினா்கள் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT