தமிழ்நாடு

நடிகா் ராமராஜனுக்கு எதிரான வழக்கு ரத்து

12th Apr 2022 05:23 AM

ADVERTISEMENT

நடிகா் ராமராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் ராமராஜன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 மே 18-ஆம் தேதி கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தென்னிலை நாலு ரோடு சந்திப்பில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, தென்னிலை போலீஸாா் தோ்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறியதாக என் மீது வழக்கு பதிவு செய்தனா்.

இந்த வழக்கு கரூா் மாவட்ட நடுவா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புகாா் கொடுத்த பொது ஊழியரிடமிருந்து எந்த ஆதாரங்களும் கேட்காமல் வழக்கை விசாரணைக்கு ஏற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதித்திருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ராமராஜன் சாா்பில் வழக்குரைஞா் கே.பிரபாகா் ஆஜராகி, சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் மனுதாரா் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட் அனுமதியளித்துள்ளாா். தென்னிலை நாலு ரோடு சந்திப்பு தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை மாஜிஸ்திரேட் கவனிக்கத் தவறிவிட்டாா் என்று வாதிட்டாா்.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் ராமராஜன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT