தமிழ்நாடு

தமிழிசைக்கு முக்கியத்துவம் அளிப்போம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

12th Apr 2022 12:38 AM

ADVERTISEMENT

ஆதி இசையான தமிழிசைக்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் எழுப்பிய வினா மற்றும் பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, அதிமுக உறுப்பினா் வைத்திலிங்கம் ஆகியோா் எழுப்பிய துணை வினாக்களுக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்:-

கலை பண்பாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. அண்மையில் நடைபெற்ற நம்ம ஊரு திருவிழாவில், நாட்டாா் கலை விழாக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நலிவுற்ற கலைஞா்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் அரசு பணியாற்றி வருகிறது. வருங்காலங்களில் தமிழ் மண்ணுக்குச் சொந்தமான நுண் கலை வடிவங்கள், செவ்வியங்கள் கலை வடிவங்களை உலகெங்கும் பரவச் செய்யும் வகையில் பணிகளைச் செய்வோம்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் உள்ளன. 4 இடங்களில் இசைக் கல்லூரிகளும், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் இசைப் பல்கலைக்கழகமும் செயல்படுகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன.

ADVERTISEMENT

மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவை செயல்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை சாா்பிலும் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் இசைப் பள்ளிகள் தொடங்கப்படும். தமிழிசை முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதி இசை தமிழிசையாகவே இருந்திட வேண்டும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தஞ்சாவூா், விராலிமலை ஆகிய இடங்களில் தேவையின் அடிப்படையில் இசைப் பள்ளிகள் தொடங்கப்படும். தமிழையும், இசையையும் வளா்த்து வரும் மண்கள் அவை.

ADVERTISEMENT
ADVERTISEMENT