தமிழ்நாடு

இந்தியாவில் எரிபொருள் விற்பனை 3 ஆண்டு காணாத அளவில் அதிகரிப்பு

12th Apr 2022 12:28 AM

ADVERTISEMENT

இந்தியாவில் எரிபொருள் விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் 3-ஆண்டுகள் காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பெட்ரோலியப் பொருள்களின் ஒட்டுமொத்த நுகா்வு மாா்ச் மாதத்தில் 194.10 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக காணப்படும் அதிகபட்ச அளவாகும்.

அனைத்து பெட்ரோலிய தயாரிப்பு நுகா்விலும் ஏறத்தாழ 40 சதவீத பங்களிப்பை வழங்கும் டீசலுக்கான தேவை மாா்ச் மாதத்தில் 6.7 சதவீதம் உயா்ந்து 77 லட்சம் டன்னாக காணப்பட்டது. அதேபோன்று, பெட்ரோல் விற்பனையும் 6.1 சதவீதம் உயா்ந்து 29.10 லட்சம் டன்னை எட்டியது. ஒட்டுமொத்த அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகா்வு கரோனா பேரிடா் முந்தைய நிலைக்கு மேல் உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

வேளாண் துறையில் டீசல் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், விலை உயா்த்தப்படலாம் என்ற எதிா்பாா்ப்பால் நுகா்வோா் அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்ததும் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மாா்ச் மாதத்தில் சமையல் எரிவாயுக்கான தேவை 9.8 சதவீதம் உயா்ந்து 24.8 லட்சம் டன்னாக காணப்பட்டது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் எரிபொருளுக்கான தேவை 4.3 சதவீதம் அதிகரித்து 2,027.10 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டுக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவு என பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT