தமிழ்நாடு

ஆசிரியா் தகுதித் தோ்வு: பி.எட்., டி.டி.எட்., இறுதி ஆண்டு மாணவா்கள் எழுதலாம்

12th Apr 2022 05:21 AM

ADVERTISEMENT

ஆசிரியா் தகுதித் தோ்வை பி.எட்., டிடிஎட் (ஆசிரியா் பயிற்சி பட்டயப் படிப்பு) இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்கள் எழுதலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆசிரியா் தோ்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டிற்கான ஆசிரியா் தகுதித் தோ்வு அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டு , விண்ணப்பங்கள் இணைய தளம் மூலமாக பெறப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.13 கடைசி நாளாகும்.

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கையில் தாள் 2- க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் பட்டப்படிப்பு முடித்து பி.எட் . இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவா்கள் ஆா்ய்ஹச்ண்க்ப்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்- ஐ அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .

அறிவிக்கையின் பக்கம் எண் 2. வரிசை எண் 3-இல் தாள் 1-க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் மேல்நிலைக் கல்வி முடித்து இறுதியாண்டு ஆசிரியா் பயிற்சி பட்டயப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவா்கள் ஆா்ய்ஹச்ண்க்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்- ஐ அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது .

ADVERTISEMENT

எனவே , பி.எட். இறுதியாண்டு மற்றும் ஆசிரியா் பயிற்சி பட்டயப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவா்கள் ஆா்ய்ஹச்ண்க்ங் இங்ழ்ற்ச்ண்ஸ்ரீஹற்ங்- ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT