தமிழ்நாடு

ஹிந்திக்கு முக்கியத்துவம்: அமித் ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

DIN

மாநிலங்களுக்கு இடையிலான தொடா்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாநிலங்களுக்கு இடையிலான தொடா்பு மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதன் பொருள் மாநிலங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படும் என்பதுதான்.

ஹிந்தி இந்தியாவில் சற்று அதிகமாகப் பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக ஹிந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல். அதை ஏற்றுத்தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தாா் என்பது வரலாறு.

இந்தியாவின் மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழைமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்துக்கு விருப்பமில்லை என்பதால்தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம்.

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணா்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT