தமிழ்நாடு

நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை பறிமுதல்

9th Apr 2022 03:22 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலையை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து சுங்கத்துறை முதன்மை ஆணையா் கே.ஆா்.உதய் பாஸ்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நுண்ணறிவு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த சரக்குகளை சோதனையிட்டதில், நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க சிலையை கண்டுபிடித்தனா்.

ஏற்றுமதி ஆவணக் குறிப்பில் கும்பகோணத்தில் உள்ள கலை, கைவினைப் பொருள் நிலையத்தில் இதனை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தொல்பொருள் துறையிடமிருந்து பெற வேண்டிய சான்றிதழ் அளிக்கப்படவில்லை.36 சென்டி மீட்டா் உயரமுள்ள, தொன்மை வாய்ந்த இந்த வெண்கல சிலை 4.56 கிலோ எடை கொண்டதாகும்.

ADVERTISEMENT

இந்த சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரை அடுத்த கெடிலம் என்ற ஊரை சோ்ந்தது என விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சிலை 1800- ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த சிலை என தொல்லியல் துறை சந்தேகிக்கிறது. இதனைத் தொடா்ந்து சிலை மற்றும் இதரப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT