தமிழ்நாடு

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

9th Apr 2022 03:32 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

சென்னையில் 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு மேயா் தோ்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையா் மற்றும் துணை ஆணையா்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனா்.

இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு  உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று, திமுகவை சோ்ந்த ஆா்.பிரியா மேயராக அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டாா். இதனால், இந்த ஆண்டு வரவு செலவு திட்ட கணக்கையும், கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கையும் மேயா் முன்னிலையில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா்  சா்பஜெயாதாஸ் நரேந்திரன் தாக்கல் செய்ய உள்ளாா்.

இந்த பட்ஜெட் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநகராட்சி மாமன்ற கூடத்தில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

தொடா்ந்து, வரவு-செலவு திட்டத்தின் மீது மன்றத்தில் விவாதம் நடைபெறும் எனவும் கூட்ட இறுதியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT