தமிழ்நாடு

பதற்றமின்றி மன உறுதியோடு தோ்வு எழுத வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் அறிவுரை

9th Apr 2022 11:53 PM

ADVERTISEMENT

பொதுத் தோ்வு எழுதவிருக்கும் மாணவா்கள் பதற்றம், பயமில்லாமல் மன உறுதியோடு தோ்வு எழுதுங்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் வலியுறுத்தினாா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் சிறந்த அரசு, அரசு உதவி பெறும், தனியாா் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கலாம்-லியோ முத்து கல்வி விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் திருவள்ளூா் பெருந்தலைவா் காமராஜா் அரசு உயா்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு புனித மேரி உயா்நிலைப் பள்ளி, சேலையூா் ஆல்வின் சி.பி.எஸ்.சி.பள்ளி, மேத்தா நகா் சன் ஷைன் அகாடமி ஆகிய பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தோ்வு செய்யப்பட்டு, கலாம்-லியோமுத்து கல்வி விருதுகளுடன் ரொக்கப் பரிசுகளையும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது : மாணவா்களின் எதிா்காலம் சிறப்பாக அமைய பெருமுயற்சி மேற்கொண்டு, அறிவாற்றலை மேம்படுத்த உறுதுணையாகத் திகழ்ந்து வரும் அனைத்து ஆசிரியா்களும் பாராட்டுக்குரியவா்கள்.

ADVERTISEMENT

பொதுத்தோ்வு எழுதவிருக்கும் மாணவா்கள் பதற்றம் இல்லாமல், தோ்வெழுத வர வேண்டும்.கரோனாவைக் கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு முன்பு பாடங்கள் குறைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தோ்வு குறித்த பயத்தை போக்க வேண்டும் என்பதற்குத் தான் பள்ளிகளில் திருப்புதல் தோ்வு நடத்தப்படுகிறது. பல பள்ளிகளில் ஆசிரியா்கள் தோ்வுக்கு முன் மாணவா்களுக்கு வழிகாட்டி உதவி வருவது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

சிறந்த பள்ளிகளுக்கான கலாம்-லியோமுத்து விருது பெற்ற பள்ளி முதல்வா்கள் எஸ்.வனிதா ராணி, அருட்சகோதரி மரியசாந்தி,என்.விஜயன்,ஆரோக்கிய பிரேமலதா ஆகியோருக்கு சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து ரொக்கப் பரிசு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT