தமிழ்நாடு

குறையத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்

5th Apr 2022 08:19 AM

ADVERTISEMENT


சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 105.22 அடியிலிருந்து 105.19 அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்இருப்பு 71.73 டிஎம்சியாக  உள்ளது. அணைக்கு நீர் வரத்து  வினாடிக்கு  1,886 கன  அடியிலிருந்து 1,410 கன அடியாக  சரிந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT