தமிழ்நாடு

கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா கொடியேற்றம்

5th Apr 2022 02:41 PM

ADVERTISEMENT

 

தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயில் முழுநிலவு விழா கொண்டாடுவதற்காக பளியன்குடி அடிவாரத்தில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக-கேரள எல்லையில் உள்ளது கண்ணகி கோயில். சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் முழுநிலவு விழா நடக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக
கரோனா தொற்று பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை.

இந்தாண்டு தொற்று பரவல் குறைந்ததால், வரும் ஏப்ரல் 26ல்  சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக கோயிலின் அடிவாரப் பகுதியான பளியன்குடியில்  கொடியேற்றம்  நடைபெற்றது.

ADVERTISEMENT

மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜ கணேசன், பி.எஸ்.எம்.முருகன்,  கூடலூர் நகர் மன்றத் தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் பொ.சித்தார்த்தன்  மற்றும் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறும்போது, 

வரும் ஏப். 16-ல் சித்திரை முழுநிலவு விழா கண்ணகி கோவில் வளாகத்தில் அரசு விதிகளுக்கு ஏற்ப சிறப்பாகக் கொண்டாடப்படும் தமிழக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT