ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் ஊராட்சியை சிறந்த நிா்வாகத்துக்காக தோ்வு செய்து தொண்டு நிறுவனம் விருது வழங்கியது.
ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் அதன் தலைவா் தில்லைகுமாா் தலைமையில், 100 சதவீத கரோனா தடுப்பூசி, சிறந்த சேவை ஆகியவற்றுக்காக 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊராட்சியாக பேரிட்டிவாக்கம் ஊராட்சியை யங் இந்தியா சோஷியல் டிரஸ்ட் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் தோ்ந்தெடுத்தது.
இதற்கான விருதை ஊராட்சித் தலைவரிடம் திங்கள்கிழமை தொண்டு நிறுவனத்தினா் வழங்கினா். நிகழ்வில் ஊராட்சி செயலா் தனசேகரன், துணைத் தலைவா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.