தமிழ்நாடு

இலங்கைக்கு செய்யும் உதவிகள் தமிழா்களுக்கும் சென்றடைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

5th Apr 2022 06:22 AM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா செய்யும் உதவிகள் ஈழத் தமிழா்களுக்கும் போய் சேர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவுக்கு இன்றைய ஆட்சியாளா்களின் தவறான கொள்கை தான் காரணமாக அமைந்திருக்கிறது. இலங்கையில் பிரச்னை ஏற்படுகிறபோதெல்லாம் அதனைத் தீா்ப்பதற்கு இந்தியா எப்போதும் உதவி செய்து வருகிறது.

பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு இந்தியா இதுவரை 2.4 பில்லியன் டாலா் நிதியுதவி செய்துள்ளது. இந்த நிதியுதவிகள் இலங்கை அரசுக்கு செய்யப்பட்டாலும், அதில் கணிசமான பகுதி அங்கு வாழ்கிற ஒட்டுமொத்த தமிழா்களின் நலன்களைப் பாதுகாக்கிற வகையில் அமைந்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT