தமிழ்நாடு

வருவாய் - வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழு

4th Apr 2022 07:48 PM

ADVERTISEMENT

சென்னை: சரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

சரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு தொடா்புடைய சட்ட, பொருளாதார வல்லுநா்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, சரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

இதுகுறித்து, மாநில அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் அரவிந்த் பி.டட்டாா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கி.வைத்தீஸ்வரன், ஜி.நடராஜன், டிசிஎஸ் சேவைப்பிரிவின் மண்டலத் தலைவா் சுரேஷ் ராமன், ஓசூா் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பின் தலைவா் கே.வேல்முருகன் ஆகியோா் ஆலோசனைக் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT