தமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டு ஜூன் 13-இல் தொடங்கும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

2nd Apr 2022 12:13 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டு, ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: 2021-22-ஆம் கல்வியாண்டைப் பொருத்தவரை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மே 2-ஆம் தேதியுடன் செய்முறைத் தோ்வு நிறைவடைகிறது. பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 28-ஆம் தேதியும், பிளஸ் 1 மாணவா்களுக்கு மே 31-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மே 30-ஆம் தேதியும் பொதுத் தோ்வு நிறைவடைகிறது.

இதே போல, மே 13-ஆம் தேதியுடன் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும் ஆண்டுத் தோ்வுகள் நிறைவடைகின்றன. ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையும், நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலைநாளும் மே 13-ஆம் தேதியாகும்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, பிளஸ் 1 தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13-ஆம் தேதி முதல் 2022-23-ஆம் கல்வியாண்டு தொடங்கும். பிளஸ் 1 வகுப்பு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT