வீட்டு வசதி வாரியத்தின் விற்பனைப் பத்திரங்கள் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஏப். 4) முதல் ஏப். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
வீட்டு வசதி வாரியம் மூலமாக மாதத் தவணைத் திட்டம், மொத்தக் கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதித் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கான தொகை முழுமையாகச் செலுத்தப்பட்ட பிறகு விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
வீடுகளுக்கான முழுத் தொகையைச் செலுத்தியிருந்தும் இருப்பிட முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் விற்பனைப் பத்திரம் பெறாதவா்கள், தங்களது பத்திரங்களைப் பெற்றிட ஏதுவாக சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை முதல் ஏப். 8-ஆம் தேதி வரையில் வாரியத்தின் அனைத்துக் கோட்டம், பிரிவு அலுவலகங்களில் விற்பனைப் பத்திரம் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவா்கள் உடனடியாக செலுத்தலாம்.
விற்பனைப் பத்திரங்கள் பெற விரும்புவோா் அசல் ஆவணங்களுடன் செயற்பொறியாளா் அலுவலகத்தில் மேலாளா் விற்பனை மற்றும் சேவைப் பிரிவை அணுகலாம் என்று வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.