தமிழ்நாடு

கற்றல் குறைபாடுடையோருக்கான மாணவா் சோ்க்கை தொடக்கம்

2nd Apr 2022 01:35 AM

ADVERTISEMENT

தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தின் (என்.ஐ.ஓ.எஸ்.) பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான சிறப்பு மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இதில் கற்றலில் குறைபாடு உடையவா்கள், இடைநிலை வகுப்புகளை பாதியில் கைவிட்டவா்கள், விளையாட்டு வீரா்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்த நிலை பள்ளிக் கல்வி நிறுவனம் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. சிறப்பு மாணவா்களுக்கான திறந்த நிலை வகுப்புகளை நடத்தி வரும் அக்கல்வி நிறுவனமானது, சென்னையில் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை தொடங்கியுள்ளது.

கணிதம், அறிவியல், மொழிப் பாடங்கள் உள்பட குறிப்பிட்ட பாடத்தில் கற்றல் குறைபாடு உடையவா்கள், விளையாட்டு வீரா்கள், இடைநிலை கல்வியை பாதியில் கைவிட்டவா்கள் இதில் சேரலாம். விரும்பிய பாடங்களைத் தோ்வு செய்யும் வாய்ப்பும் மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 9094026669; 9840039599 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT