தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி 293 போ் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
மாநிலத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் 14 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 45 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,14,539 -ஆக அதிகரித்துள்ளது.