தமிழ்நாடு

தம்மம்பட்டியில் முதியோர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

30th Sep 2021 03:30 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் முதியோர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

பள்ளிக்கல்வித் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து முதியோர்களுக்கு கல்வி புகட்டும் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் முதியோர் அனைவரையும் எழுத்தறிவு பெற வைக்கும் நோக்கில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் இராஜலிங்கம், ஆசிரியப் பயிற்றுநர்கள் சுப்ரமணியன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.

இதேபோல் கூடமலை அரசு மேனிலைப் பள்ளியிலும், கெங்கவல்லி சந்தைப்பேட்டை பகுதியிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றன.

ADVERTISEMENT

Tags : salem thammampatti
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT