தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல்

30th Sep 2021 10:28 PM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க- நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை

மேலும் 16.40 கிலோ சந்தனக் கட்டைகளும் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டதோடு 100 மின் விசிறிகள், 215 புடவைகள், 1065 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்கும சிமிழ்கள் மற்றும் 1009 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Local body Election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT