தமிழ்நாடு

துரைமுருகன் நாவடக்கத்துடன்‌ பேச வேண்டும்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்

30th Sep 2021 09:44 PM

ADVERTISEMENT

எம்ஜிஆர் பற்றிய துரைமுருகனின் பேச்சுக்கு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 28.9.2021 அன்று திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, ஜோலார்பேட்டையில்‌ நடைபெற்ற திமுக நிர்வாகிகள்‌ கூட்டத்தில்‌ பேசிய துரைமுருகன்‌‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக நிறுவனர்‌, “எம்‌.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என்று கூறி இருப்பது, சாத்தான்‌ வேதம்‌ ஓதுவது போல்‌ உள்ளது. வரலாறு என்பது நின்று, நிலைத்து நிற்கும்‌ கல்வெட்டைப்‌ போன்றது. அப்படிப்பட்ட வரலாற்றுக்குச்‌ சொந்தமாக வேண்டும்‌ என நினைப்பவர்கள்‌ ஏராளம்‌. ஆனால்‌, வரலாறே ஒரு சிலரைத்‌ தான்‌ தனக்குச்‌ சொந்தமாக்கிக்‌ கொண்டது. அந்த ஒரு சிலரில்‌ ஒருவர்‌ தான்‌, நம்‌ எம்‌.ஜி.ஆர்‌‌.

துரைமுருகன்‌, தி.மு.க. கடந்து வந்த பாதையை, தான்‌ கடந்து வந்த பாதையை மறந்துவிட்டுப்‌ பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டுப்‌ பேசுகிறாரா, “நம்பிக்கைத்‌ துரோகம்‌” என்று  துரைமுருகன்‌ கூறியவுடன்‌ எங்கள்‌ நினைவிற்கு வருவது “உண்ட வீட்டிற்கு இரண்டகம்‌ செய்வது” என்ற பழமொழிதான்‌.  

இதையும் படிக்க- கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

ADVERTISEMENT

தன்னை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆரையே நம்பிக்கைத்‌ துரோகி என்று சொல்லி இருக்கிறார்‌. துரைமுருகனின்‌ இந்தப்‌ பேச்சு நம்பிக்கைத்‌ துரோகத்தின்‌ உச்சக்‌ கட்டம்‌. எம்ஜிஆர் எந்தக்‌ காலத்திலும்‌ யாருக்கும்‌ துரோகம்‌ செய்ததில்லை. துரோகம்‌ செய்ய வேண்டிய அவசியமும்‌ அவருக்கு இல்லை. ஏனென்றால்‌, அவர்‌ மக்கள்‌ செல்வாக்கு படைத்தவர்‌; மக்களின்‌ நம்பிக்கையைப்‌பெற்றவர்‌. எம்ஜிஆரை நம்பி வாழ்ந்தவர்கள்‌ உண்டு, ஆனால்‌ அவர்‌ எந்த ஒரு தனி நபரையும்‌ நம்பி வாழவில்லை. அவரிடம்‌ உள்ள மிகப்‌ பெரிய சக்தி மக்கள்‌ சக்தி. அவருக்குத்‌ துரோகம்‌ செய்தவர்கள்‌ காணாமல்‌ போன வரலாறு உண்டு என்பது துரைமுருகனுக்கே நன்கு தெரியும்‌. 

எம்‌.ஜி.ஆரை இழிவுபடுத்தும்‌ வகையில்‌ பேசும்‌ துரைமுருகனின்‌ இந்தப்‌ பேச்சு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “துரோகம்‌ கத்தியைப்‌போன்றது. மற்றவர்களைக்‌ குத்தும்போது சுகமாக இருக்கும்‌. நம்மை திரும்பிக்‌ குத்தும்போது கொடூரமாக இருக்கும்‌” என்பதை  துரைமுருகன்‌ உணர்ந்து செயல்பட வேண்டும்‌ என்பதே தமிழக மக்களின்‌ எதிர்பார்ப்பாக உள்ளது.

“எப்படிப்பட்ட பாவத்தைச்‌ செய்தவர்க்கும்‌ அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய்‌ நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம்‌ இல்லை” என்ற திருவள்ளுவரின்‌ வாக்கினை மனதில்‌ நிலை நிறுத்தி, இனி வரும்‌ காலங்களில்‌ நாவடக்கத்துடன்‌ பேச வேண்டும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

Tags : ADMK duraimurugan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT