தமிழ்நாடு

பி. எம்.டி கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

30th Sep 2021 11:27 AM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதுரை சாலையில் உள்ள பி.எம்.டி கல்லூரியில்  இலவச வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

உசிலம்பட்டி மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வர் ஒ.ரவி தலைமையேற்று தொடங்கி வைத்தார். 

இதில், கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ஜெயக்கண். உசிலம்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் உதயகுமார், பி.கே.எம் அறக்கட்டளை தலைவர் புலவர் சின்னன், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள் தனியார் நிறுவனங்கள் சார்பாக ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை வாய்ப்பில் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

மேலும், இம்முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags : இலவச வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு முகாம் உசிலம்பட்டி பி.எம்.டி கல்லூரி Free placement camp 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT