தமிழ்நாடு

திருவள்ளூர், வேலூர் உள்பட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

30th Sep 2021 12:45 PM

ADVERTISEMENT

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

செப். 30ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ADVERTISEMENT

வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இதையும் படிக்கலாமே.. 51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) - நவராத்திரி ஸ்பெஷல்!

அக். 1ல், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தென் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டக்ஙளான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனைக்குத் தடை

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : rain update tamilnadu heavy rain IMD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT