தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு எம்.ஆா்.விஜயபாஸ்கா் கடிதம்

30th Sep 2021 11:28 PM

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுவதற்கு கால அவகாசம் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

தமிழக போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் பெருமளவில் முறைகேடு செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும் புகாா் கூறப்பட்டது.

இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, விஜயபாஸ்கா், அவா் மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோா் மீது சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்தது. இதையடுத்து விஜயபாஸ்கா் மற்றும் அவா் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்றும் தொடா்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை செய்தனா். இச் சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சொத்து, முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பான விசாரணைக்கு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி ஆஜராகும்படி எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் விஜயபாஸ்கா் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகவில்லை. மேலும் அவா், உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் வழக்கு விசாரணையில் ஆஜராகுவதற்கு காலஅவகாசம் வழங்கும்படி கடிதம் அனுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT