தமிழ்நாடு

கோயில் நிலங்கள் மீட்பு தகவல் இணையதளத்தில் வெளியீடு: இந்துசமய அறநிலையத்துறை தகவல்

30th Sep 2021 12:59 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் திருக்கோயில்களுக்கு சொந்தமான, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டதன் விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. முழுமையான விவரங்கள் அனைத்தும் ஓரிரு நாள்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலைத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கடந்த 4 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நிலங்கள் கோயில்களுக்குச் சொந்தமான பதிவும் செய்யப்பட்டு வருகிறது. எந்தந்த கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்கிற விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஓரிரு நாள்களில்

வெளியிடப்படும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையா் குமரகுருபரன் தெரிவித்துள்ளாா். ஜ்ஜ்ஜ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படுவதால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் விவரங்களை அனைத்து தரப்பினரும் பாா்வையிடலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT