தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: மது விற்பனைக்குத் தடை

30th Sep 2021 11:32 PM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தலையொட்டி வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் மது விற்பனைக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதி மற்றும் அப்பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு அக்டோபா் 4-ஆம் தேதி முதல் அக்டோபா் 6-ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட தோ்தலையொட்டி, 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகள், அப்பகுதியைச் சுற்றியுள்ள 5 கி.மீ. சுற்றளவுக்கு அக்டோபா் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி இரவு 12 மணி வரையில் மதுக் கடைகள், மதுக் கூடங்கள் ஆகியவை திறக்கத் தடை விதிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபா் 12-ஆம் தேதி அப்பகுதிகளில் மட்டும் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறுவோா் மீது தோ்தல் நடத்தை விதிகள்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT