தமிழ்நாடு

குழப்பத்தில் காங்.: தலைவரைத் தொடர்ந்து பொதுச்செயலரும் ராஜிநாமா

28th Sep 2021 09:55 PM

ADVERTISEMENT


பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகிய நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ராஜிநாமா செய்தார்.

தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய சித்துவுக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்ராவும் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், பஞ்சாப் சட்டப்பேரவை அமைச்சராக பதவியேற்ற ரசியா சுல்தானாவும் சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

படிக்க | ‘தலித் முதல்வரானதை சித்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’: ஆம் ஆத்மி விமரிசனம்

ADVERTISEMENT

இவ்வாறு நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அம்மாநிலத்தில் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

படிக்க | பாஜகவில் இணைகிறாரா அமரீந்தர் சிங்? தில்லி பயணம் குறித்து விளக்கம்

அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்ற சித்து இரண்டே மாதங்களில் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Navjot Singh Sidhu punjab Congress leadership
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT