தமிழ்நாடு

சோமம்பட்டி ஏரியில் 500 பனை விதைகள் விதைப்பு

26th Sep 2021 11:04 AM

ADVERTISEMENT


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஏரியில், இரு தினங்களாக 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக்குழு, வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை, ரம்கோ நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, ஏரியில் புதர்மண்டிக்கிடந்த சீமைக்கருவேலம் மரங்களை அப்புறப்படுத்தி, பலன் தரும் நாவல், வெள்ளைவேல், புளியன், புங்கன், வேம்பு, கொடுக்காப்புளி, தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்ட மரத்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறது.

பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

ADVERTISEMENT

இந்த ஏரிக்கரை மற்றும் பாதைப்பகுதிகளில், சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்த பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் குடும்பத்தினர் சேகரித்து கொடுத்த 500க்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டது. 

இதையும் படிக்க | நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 28,326 ஆக குறைந்தது

சோமம்பட்டி ஏரியில் 500க்கும் அதிகமான பனை விதைகள் விதைக்கப்பட்டது மனநிறைவு தருவதாக ஊராட்சி மன்றத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கே.மகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

 

Tags : Somampatti Lake palm seeds
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT