தமிழ்நாடு

பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

DIN

பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 70 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகளை நம்பித்தான் பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். அதனால் தான், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.  

மேற்காணும் முக்கியமான வாக்குறுதிகளில் 4,000 ரூபாய் நிவாரணத் தொகை, உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் மற்றும் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு ஆகிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. பெட்ரோல் விலை மிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பு” என்ற வாக்குறுதி 25 விழுக்காடு நான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதேசமயத்தில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மீண்டும் பழை ஓய்வூதியத் திட்டம் — என்று அறிவித்துவிட்டு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று  நிதி அமைச்சர்  தெரிவித்து, அந்த வாக்குறுதி நிறையேற்றப்படாது என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றவில்லை என்றாலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தும், அதனைத் தராமல் ஆறு மாதத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்திருக்கிறது.
'உள்ளதும் போச்சு' என்ற நிலையில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 'தேர்வு ரத்து' என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு தற்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அந்த வாக்குறுதி நிறையேற்றப்பட்டுவிட்டதாக கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதை தெரியவித்துக் கொள்கிறேன்.

எனவே,  தமிழ்நாடு முதலமைச்சர், எந்த வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஏழை எளிய மாணவ -மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT