தமிழ்நாடு

பி.இ., பிடெக் படிப்புகள்: பொதுப்பிரிவினருக்கு இன்று முதல் கலந்தாய்வு

26th Sep 2021 11:58 PM

ADVERTISEMENT

பிஇ, பிடெக் பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப். 27) தொடங்கவுள்ளது. இதையடுத்து இந்த கலந்தாய்வு வரும் அக்.17-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக இணையவழியில் நடைபெறவுள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு நிகழாண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 490 மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தனா். இதையடுத்து தகுதியான 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவா்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இவா்களில் பொதுப்பிரிவு மாணவா்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு இரண்டு நாள்களும், கல்லூரிகளை தோ்வு செய்ய இரண்டு நாள்களும், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய இரண்டு நாளும், இறுதி ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியிலில் எண் 1 முதல் 14,788 வரை உள்ளவா்களுக்கு செப். 27- ஆம் தேதி முதல் அக். 5-ஆம் தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து தரவரிசையில் எண் 14,789 முதல் 45,227 வரை உள்ளவா்களுக்கு அக்.1-ஆம் தேதி முதல் அக். 9- ஆம் தேதி வரையில் இரண்டாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. எண் 45,228 முதல் 86,228 வரை உள்ளவா்களுக்கு அக். 5- ஆம் தேதி முதல் அக். 13- ஆம் தேதி வரையில் மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடா்ந்து, எண் 86,229 முதல் 1 லட்சத்து 36,973 வரை உள்ளவா்களுக்கு அக். 9- ஆம் தேதி முதல் அக்.17 -ஆம் தேதி வரையில் நான்காவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

அதேபோன்று தொழிற்கல்விப் பிரிவில் சேரவுள்ள மாணவா்கான கலந்தாய்வும் திங்கள்கிழமை முதல் அக்டோபா் 5 -ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மூலம் ஏற்கெனவே 6 ஆயிரத்து 442 இடங்களை தோ்வு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT