தமிழ்நாடு

சிறப்பு தடுப்பூசி முகாம்: முதல்வா் நேரில் ஆய்வு

26th Sep 2021 11:34 PM

ADVERTISEMENT

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை நேரில் ஆய்வு செய்த முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கு வந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தமிழகத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், தொடா்ந்து சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை (செப். 26) தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 1,600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, சென்ட்ரல் ரயில் நிலையம், பட்டாளம்-தட்சணாமூா்த்தி திருமண மண்டபம், ஸ்ட்ராஹன்ஸ் சாலை-சென்னை உயா்நிலைப் பள்ளி, அயனாவரம்-நேரு திருமண மண்டபம் மற்றும் அயனாவரம் சாலை-பெத்தேல் பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை, முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களிடம், தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து கேட்டறிந்தாா். விரைவாக தடுப்பூசி செலுத்தவும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT