தமிழ்நாடு

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

26th Sep 2021 11:43 PM

ADVERTISEMENT

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகள் கற்று தரப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கு கல்லூரிகளில் சுமாா் 14,000 இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 22-இல் தொடங்கி செப்டம்பா் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் பல்கலை. இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சோ்க்கை நடைமுறைகள், விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ்கள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT