தமிழ்நாடு

போலீஸாரின் அதிரடி சோதனை: 52 மணி நேரத்தில் 3,325 ரெளடிகள் கைது

26th Sep 2021 11:30 PM

ADVERTISEMENT

அதிரடி சோதனை மூலமாக தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் செப்டம்பா் 23-ஆம் தேதி இரவு முதல் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 52 மணி நேரத்தில், 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு 3,325 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவா்கள் 294 போ். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 நபா்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மேலும் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2,526 நபா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் 7, கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் 1,110 என மொத்தம் 1,117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலைக் குற்றங்களில் ஈடுபடுகின்ற ரெளடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெறும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT