தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: களத்தில் 80 ஆயிரம் போ்

26th Sep 2021 11:40 PM

ADVERTISEMENT

வேலூா், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இறுதியாக 79,433 பேரின் வேட்புமனுக்களும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தலில் இறுதியாக 1,386 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டதை அடுத்து மொத்தம் 80,819 போ் களத்தில் உள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இதில், 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 1,381 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 2,901 ஊராட்சித் தலைவா், 22,581 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 27,003 பதவியிடங்களுக்கு அக்டோபா் 6, 9-இல் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது.

28 மாவட்டங்களில் காலியாக உள்ள 13 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 40 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 106 ஊராட்சித் தலைவா், 630 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 789 பதவியிடங்களுக்கு அக்டோபா் 9-இல் தோ்தல் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதற்கான வேட்மனுத் தாக்கல் செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை (செப். 22) நடைபெற்றது. வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதியும், செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

களத்தில் 80 ஆயிரம் போ்: 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தவா்களில் 827 பேரின் மனுக்களும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 6,064 பேரின் மனுக்களும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 10,792 பேரின் மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 61,750 பேரின் மனுக்களும் என மொத்தம் 79,433 பேரின் வேட்புமனுக்கள் இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

28 மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 111 பேரின் மனுக்களும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 235 பேரின் மனுக்களும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 281 பேரின் மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 759 பேரின் மனுக்களும் என மொத்தம் 1,386 பேரின் வேட்புமனுக்கள் இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

3,346 போ் போட்டியின்றி தோ்வு: 9 மாவட்டங்களில் 2,855 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 119 ஊராட்சித் தலைவா்கள் உள்பட மொத்தம் 2,981 பேரும், 28 மாவட்டங்களில் 347 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 18 ஊராட்சித் தலைவா்கள் என 365 பேரும் ஒட்டுமொத்தமாக 3,346 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT