தமிழ்நாடு

பழனியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி; 14 பேர் காயம்

24th Sep 2021 08:06 AM

ADVERTISEMENT

 

பழனி: பழனியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை  ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கோவைக்கு  சென்றுள்ளது. அரசு பேருந்தை செல்லப்பாண்டியன் என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார்.  

அரசு பேருந்து கோவை சாலையில் தாளையம் என்ற இடத்தில் சென்றபோது, கோவையில் செங்கல் பாரத்தை இறக்கிவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த லாரி அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த உக்கிரபாண்டி, மணிகண்டன், முருகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 18 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய லாரி. 

விபத்து நடந்த இடத்தில் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விபத்து குறித்து ஆய்வு செய்தார். 

சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident Three killed Government bus collides 14 injured
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT