தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

திருச்சியிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற போதைப்பொருள் மத்திய  வருவாய் நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவரை சுங்கத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து அவ்வப்போது சந்தேகப்படும்படியான பார்சல் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளது.  இதுதொடர்பாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் தனியார் கூரியர் கலெக்சன் மையத்திற்கு சென்ற மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் (சுங்கத்துறையின் ஒரு பிரிவு) , பார்சல் அனுப்ப வந்திருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார்(32) என்பதும் அவர் ஆஸ்திரேலியா நாட்டுக்கு அந்த பார்சலை அனுப்ப வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்த பார்சல் குறித்து மேற்கொண்ட விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனையடுத்து அந்த பார்சலை பிரித்து சோதனை மேற்கொண்டதில் அதில் எபிட்ரின் என்ற போதைப்பொருள் (ஐந்தரை கிலோ) இருந்தது தெரியவந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு பல லட்சங்கள் இருக்கலாமென சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்து, நந்தகுமாரை கைது செய்தனர். மேலும் அவரை திருச்சி மாவட்ட ஜேஎம் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணப்பாறை கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

நந்தகுமார் இதுவரை எந்தெந்த நாடுகளுக்கு இதுபோன்று போதைப்பொருட்களை அனுப்பியுள்ளார் எங்கிருந்து அவர் கொள்முதல் செய்து உள்ளார் என்பது குறித்த விவரங்களை சுங்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT