தமிழ்நாடு

14 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை மையம்

DIN

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்னாமலை, திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், செப்டம்பர் 26 முதல் 28 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT