தமிழ்நாடு

பெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்வு முறை பயிற்சி

24th Sep 2021 02:59 PM

ADVERTISEMENT

 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையில்  பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண்ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற வாழ்க்கையிலும் வேலையிலும் சமநிலை வாழ்வு முறை என்ற 3 நாள்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகள், கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல், காவல் குடும்பத்தினருக்கு அனைத்து காவலர் குடியிருப்புகளிலும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆயுதப்படை பெண் காவலர்களுக்காக என்ற 5 நாள்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் கடந்த 22.9.2021 துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு, காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற வாழ்க்கையிலும் வேலையிலும் சமநிலை வாழ்வு முறை என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாமினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.09.2021) காலை, புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார்.

ADVERTISEMENT

பெண் காவல் ஆளிநர்கள் காவல் பணியிலும், சொந்த வாழ்விலும் திறம்பட செயல்பட்டு, இரண்டிலும் சம அளவில் வெற்றி பெறுவதற்காக, சவால்களை எதிர்கொள்வது, நேர்மறை சிந்தனைகள் உருவாக்குதல், உறவுகளை எளிதாக மேம்படுத்துவது, தன்னம்பிக்கை, மகிழ்ச்கியாக வாழ்வது  ஆகியவை குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் எனவும், சென்னை பெருநகரில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான பெண் காவல் ஆளிநர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், ஒரு பயிற்சி வகுப்பில் 76 பெண் காவல் ஆளிநர்கள் என 64 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார். மேலும், பெண் காவல் ஆளிநர்களுக்கு பயிற்சி வகுப்புடன் அவர்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, இரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்  மற்றும் மார்பக புற்றுநோய்  உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படும் என தெரிவித்தார்.
 

Tags : police chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT