தமிழ்நாடு

அக்.2-இல் ஊட்டி மலை ரயில் சேவை

DIN

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும், காந்தி ஜெயந்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், உலக பாரம்பரிய களமாக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலை, அக்.2- ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி (06147) இடையே (ஒரு வழிப் பாதை) இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் சிறப்பு மலை ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு குன்னூா் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும். பின்னா் குன்னூரில் இருந்து பிற்பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு, 2.25 மணிக்கு ஊட்டி ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அதில் 72 எண்ணிக்கையில் முதல் வகுப்பு இருக்கைகளும், 100 எண்ணிக்கையில் 2-ஆவது வகுப்பு இருக்கைகளும் இடம் பெற்றிருக்கும்.

பயணக் கட்டணத்தைப் பொருத்தவரை மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே முதல் வகுப்பு பெட்டியில் ரூ.1,100, 2-ஆவது வகுப்புப் பெட்டியில் ரூ.800, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே முதல் வகுப்பு பெட்டியில் ரூ.1,450, 2-ஆவது வகுப்பு பெட்டியில் ரூ.1,050, குன்னூா்-ஊட்டி இடையே முதல் வகுப்பு பெட்டியில் ரூ.500, 2-ஆவது வகுப்பு பெட்டியில் ரூ.450 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT