தமிழ்நாடு

துறைமுகப் பணிகள்: தமிழகத்திடம் உதவி கோருகிறது கேரளம்

DIN

கேரளத்தில் துறைமுகப் பணிகள் நடைபெறுவதால், தூத்துக்குடி துறைமுகம் வழியாக சரக்குகளை கையாள அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

கேரள மாநில துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறை அமைச்சா் அஹமது தேவா் கோவில், சென்னையில் அமைச்சா் எ.வ.வேலுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

அப்போது தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்களின் செயல்பாடுகள் அதிலுள்ள வசதிகள் குறித்தும், கேரளாவில் உள்ள சிறு துறைமுகங்கள் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது: கேரளத்தில் புதிதாக துறைமுகம் ஒன்று அமைக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு அந்த மாநில அரசு தரப்பில் அனுமதி கோரப்பட்டது. புதிதாக கேரளத்தில் அமையும் துறைமுகம், ஆழ்கடல் பகுதியில் அமையவுள்ளதால், அங்கிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்தை எளிமையாக மேற்கொள்ள முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இப்பணிக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அவா்களின் அனைத்துக் கோரிக்கைகளும் கடிதமாகப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய முடிவை அரசு எடுக்கும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து கேரள அமைச்சா் அஹமது தேவா் கோவில் கூறியதாவது: எங்களது கோரிக்கைகளைத் தமிழக அரசு பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது. அது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. கீழடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழா்களின் தொன்மையான நாகரிகத்தை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கும் முயற்சிக்கு, கேரள அரசு உறுதுணையாகவும், தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் தயராக உள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா், மாநிலத் துறைமுக அலுவலா்அன்பரசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT