தமிழ்நாடு

கெங்கவல்லி ஒன்றியத்தில் 2,000 பேருக்கு தடுப்பூசி; 200 பேருக்கு புடவை, டிபன்பாக்ஸ் பரிசு

19th Sep 2021 04:58 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி 20 மையங்களில் 2,000 பேருக்கு போடப்பட்டது. அவர்களில் குலுக்கல் முறையில் 200 பேருக்கு புடவை, டிபன்பாக்ஸ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கெங்கவல்லி ஒன்றியத்தில் ஆணையாம்பட்டி, ஆணையாம்பட்டிபுதூர், ஒதியத்தூர், நடுவலூர், கெங்கவல்லி சந்தைப்பேட்டை, சின்னகரட்டூர், கூடமலை, 74.கிருஷ்ணாபுரம், மூலப்புதூர், கடம்பூர், நாகியம்பட்டி, உலிபுரம், பழைய சமுதாய நலக்கூடம், அறிஞர் அண்ணா சமுதாய நலக்கூடம், காந்திநகர், கொண்டயம்பள்ளி ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளிலும், தெடாவூர், கூடமலை, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, பச்சமலை ஆகிய ஊர்களின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் என மொத்தம் 20 மையங்களில் தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டன. 

பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமானதால், மதியம் 12.30 மணி அளவிலேயே, அன்றைய இலக்கான 2000 பேர் இலக்கு பூர்த்தியடைந்திருந்தன.

இம்மையங்களை கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) எஸ்.கே.ராஜேந்திரன், கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலர் அந்தோணிமுத்து, வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி, கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சித்ரா ஆகியோர் 20 மையங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

ஒவ்வொரு மையங்களிலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு பெயர், முகவர் அடங்கிய சீட்டுக்களை போடும் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மையங்களிலும் 5 பெண்கள் வீதம் 20 மையங்களில் 100 பெண்களுக்கு புடவைகளும், 5 ஆண்கள் வீதம் 100 ஆண்களுக்கு டிபன்பாக்ஸ்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன.

Tags : vaccine coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT