தமிழ்நாடு

கல்குவாரிகளுக்கு கடுமையான நிபந்தனைகள்: உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் கல்குவாரிகள் நடவடிக்கைகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென கூறிய நீதிமன்றம், அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பை மாவட்ட ஆட்சியா்கள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவுக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் பள்ளிக்கு அருகில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்குவாரியில் இருந்து வெளியேறும் தூசி கலந்த புகை பள்ளிக் குழந்தைகளின் உடல் நலத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே சட்டவிரோதமாக இயங்கும் இதுபோன்ற குவாரிகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிபந்தனைகள், விதிகளை மீறி செயல்பட்டுவரும் கல் குவாரிகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் கவலை அளிக்கக்கூடியதாகும். மாநிலம் முழுவதும் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் குவாரிகள் இயங்கிவருவதாகத் தெரிகிறது. அனுமதிக்கப்பட்ட கல்குவாரிகள் எவ்வித விதிமீறல்கள் எதுவுமின்றி செயல்படுவதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்வதோடு, கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். கல்குவாரிகள் தொடா்பாக, கடந்தாண்டு செப்டம்பா் 5 ஆம் தேதி, அதைத்தொடா்ந்து கடந்த ஜூலை 19 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பின்பற்றப்படுவதையும் மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும். நிபந்தனைகளைக் கடைப்பிடித்து அனுமதிக்கப்பட்ட கல்குவாரிகள் மட்டுமே இயங்குவதை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பின்னா், அது தொடா்பான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட இரு கிராமங்களிலுள்ள பிரச்னை தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் . செப்டம்பா் 20 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT