தமிழ்நாடு

கந்தர்வகோட்டை: 106 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனத்தில் ஒரு மாதமாக காத்திருக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்

DIN

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலங்களுக்கு மேலாக 106 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனத்தில் பல டன் எடையுள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் இருக்கின்றது. 

ஹரியாணா மாநிலத்தில் உள்ள பாரத் மிகு மின் நிலைய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து பல நூறு கிலோ மீட்டர் தாண்டி கந்தர்வகோட்டையில் தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வளவம்பட்டி கிராமம் அருகே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருக்கின்றது.

இதுபற்றி விசாரித்தபோது கந்தர்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை கிராமம் அருகே தமிழக அரசின் மின் நிலைய பணி நடைபெற்று வருவதாகவும், அந்த மின் நிலையத்திற்குத் தேவையான  பல டன் எடை உள்ள ஒரு ட்ரான்ஸ்பாரம் ஏற்றப்பட்டு வந்துள்ளதாகவும் ஹரியாணா மாநிலதிலிருந்து கந்தர்வகோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளதாகவும் மின்நிலைய பணி நடக்கும் கல்லாக் கோட்டைக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லாததால் அந்த இடத்திற்கான சாலை வசதி அமைக்கும்வரை நாங்கள் காத்திருப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் சாலைப்பணி சரி செய்யப்பட்டு விடும், அதன் பின்பு இந்த மின்சார டிரான்ஸ்பாரத்தினை அங்கு இறக்கி வைத்து செல்வோம் என்று அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் தெரிவித்தார். சாலையோரத்தில் ராட்சத மின்சாரா டிரான்ஸ்பர் ஏற்றப்பட்ட  வாகனத்தை அந்த வழியாகச் செல்வோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT