தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

19th Sep 2021 03:00 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சிநகர் மலைவாழ் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் மலைவாழ் மக்கள் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் அப்பகுதியில் உள்ள ஒரு சில பொதுமக்கள் கலந்து கொள்ளாமல் அப்பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் மீது ஏறி கரோனா தடுப்பு ஊசி போடாமல் தவிர்த்து வந்தனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டு இதில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு அரிசி மற்றும் காய் கனி தொகுப்பினை வழங்கி தடுப்பூசி போட ஊக்குவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜா,
தலைமையில் மாவட்ட நல குழு உறுப்பினர் வழக்கறிஞர் மலைச்சாமி, மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர் வழக்குரைஞர் பாண்டியராஜா, முன்னிலையில் மற்றும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், மற்றும் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு, சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் கிராமத்திலுள்ள 70 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கனிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன், தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுசீலா, மண்டல துணை வட்டார அலுவலர் தெய்வ ராமன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமாறன், வார்டு உறுப்பினர் ரங்கநாதன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags : Corona vaccination camp Usilampatti மலைவாழ் மக்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT