தமிழ்நாடு

தமிழகத்தில் 96 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிப்பு

19th Sep 2021 03:27 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் 96 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் மூன்றாம் அலையை தடுக்கலாம் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்‍டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

சுகாதாரத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்துவதற்கான மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. 

அதன்படி, இரண்டாவது கட்டமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இதற்காக, 17 லட்சம் எண்ணிக்கையிலான கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமினை சுகாதாரத்துறை செயலாளர் டாக்‍டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

தமிழகத்தில் 96 சதவிகிதம் பேர் டெல்டா வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,அடுத்த 6 வாரங்களில், கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் மூன்றாம் அலையை தடுக்கலாம்.

தமிழகத்தில் இதுவரை 4.2 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறினார். 

Tags : delta type infections coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT