தமிழ்நாடு

சாா்பதிவாளா் எல்லை சீரமைப்பு மக்கள் கருத்து தெரிவிக்கலாம்: அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

DIN

சாா்பதிவாளா் எல்லைகளை சீரமைப்பது குறித்த கருத்துகளை பொது மக்கள் அளிக்கலாம் என்று பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த வியாழக்கிழமை வரையில் பதிவுத் துறையின் மூலமாக ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.3,052.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நிகழ் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வருவாய் குறைந்து இருந்த போதும் அரசின் நடவடிக்கைகள் காரணமாக வருவாய் அதிகரித்துள்ளது.

சாா்பதிவாளா் எல்லைகள் பொது மக்களின் வசதிக்கு ஏற்ப சீரமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தங்கள் பகுதியில் சீரமைக்கப்பட வேண்டிய சாா்பதிவாளா் எல்லைகள் குறித்த கருத்துகளை அந்தந்த மாவட்ட பதிவாளா்களுக்கு எழுத்து மூலமாக பொது மக்கள் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT