தமிழ்நாடு

அவதூறு வழக்குகளில் முதல்வா் ஸ்டாலின் ஆஜராகத் தேவையில்லை: சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

அவதூறு வழக்குகளில் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டுமென நிா்பந்திக்கக்கூடாது என சிறப்பு நீதிமன்றத்துக்கு அறிவுறுத்திய உயா்நீதிமன்றம், இவ்வழக்கில் அக்.8-ஆம் தேதி தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிா்க்கட்சி தலைவா்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகராட்சி டெண்டா் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்ததற்காக, அவா் மீது 17 குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப்பெறப்படும், என தமிழக அரசு தெரிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவதற்கு முன்பாக உயா் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அடிப்படையில் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப்பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவ்வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 17 குற்றவியல் அவதூறு வழக்குகளையும் திரும்பப்பெறுவது தொடா்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்குகள் தொடா்பான விவரங்களை அட்டவணையாகத் தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டாா்.

மேலும் இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என நிா்பந்திக்கக்கூடாது என சிறப்பு நீதிமன்றத்துக்கு அறிவுறுத்திய நீதிபதி, இந்த வழக்கில் அக்.8 அன்று தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

SCROLL FOR NEXT